கோலாலம்பூர், மார்ச் 17-
கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஙெ்லாயாங் பாசார் போரோங் மூடப்படுகிறது என்று புலனத்தில் (வாட்ஸ் அப்) செய்தியால் ஒட்டுமொத்த வியாபாரிகளும் கதிகலங்கிப்போனதாக செலாயாங் பாசார் போரோங்கில் காலங்காலமாக வியாபாரம் செய்து வரும் காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.
பாசார் போரோங்கை மூடுகிறோம் என்று மிகப்பெரிய பேனர் (பதாகை) சாலாயாங்
பாசார்போரோங்கில் தொங்கவிடப்பட்டுள்ளது என்று அந்தப் பெண்மணி தனது புலனத்தில் பேசியிருப்பது ஆச்சிரியத்தையும் வேதனையை அளிப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் மாலையில் பரவிய அந்த வதந்தியால் நாங்கள் நிம்மதியை இழந்து விட்டோம். நாடு தழுவிய அளவில் கணக்கில் அடங்காத தொலைபேசி அழைப்புகள் எங்களை வாட்டி வதைத்தன என்று 20 ஆண்டுகளுக்கு மேலாக செலாயாங் பாசார் போரோங்கில் காய்கறி வியாபாரம் செய்து வரும் மணிச்செல்வம் தெரிவித்தார்.
பாசார் போரோங் மூடப்படுகிறதா, எங்களுக்கு காய்கறி கிடைக்காதா, எத்தனை நாளைக்கு மூடப்படுகிறது என்ற தொலைபேசி அழைப்புகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானோம் என்றார்.
பொறுப்பில்லாத ஒரு பெண்மணி புலனத்தில் பரப்பிய வதந்தியால் நேற்று முன்தினம் பாசார் போரோங் கதிகலங்கிவிட்டது என்று 25 ஆண்டுகளுக்கு மேலாக காய்கறி வியாபாரம் செய்து வரும் ஜோன் என்பவர் தெரிவித்தார். மேலும் செய்திகள் வெளிவரும்.