கொரோனா : தடுக்கக்கூடிய வேதிப்பொருட்களை கண்டறிந்த சூப்பர் கம்ப்யூட்டர்

சூப்பர் கம்ப்யூட்டர்

வாஷிங்டன், மார்ச் 21-

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று உலகம் முழுக்க பல நாடுகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இதில் அமெரிக்கா ஏறத்தாழ வெற்றி கண்டு உள்ளது.

கொரோனா வைரஸ் விஞ்ஞானிகளுக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது: வைரஸ் பரவுகின்ற வேகத்தை பார்த்தால் விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.

அமெரிக்காவை சேர்ந்த சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கக்கூடிய வேதிப்பொருட்களை கண்டறிந்து உள்ளது. எந்த மருந்து கலவைகள் ஹோஸ்ட் செல்களைப் பாதிக்காமல் வைரஸை திறம்பட தடுக்கக்கூடும் என்பதை பகுப்பாய்வு செய்து உள்ளது.

உலகில் இருக்கும் எல்லா கெமிக்கல்களையும் இந்த சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் சோதனை செய்து வருகிறது. அனைத்து வேதி பொருட்களையும் இந்த சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் சோதனை செய்து, அதை ஒன்றுடன் ஒன்று சேர்த்து மருந்துகளை உருவாக்கி பார்க்கும். இதை வைத்து பல மில்லியன் வேதிப்பொருட்களை உருவாக்கும். அதன்பின் இந்த வேதிப்பொருட்களின் எது கொரோனா வைரஸை கட்டுபடுத்தும் என்று சோதனை செய்யும்.

தற்போது இதன் மூலம் மொத்தம் 77 வேதிப்பொருள் கலவைகளை இந்த சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் கண்டுபிடித்துள்ளது. இதை பயன்படுத்தினால் இந்த வைரஸை தடுக்க வாய்ப்புள்ளது என்று இதன் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதை விரைவில் நிஜத்தில் சோதனை செய்து அதன்பின் மனிதர்களிடம் சோதனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இந்த சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் ஐபிஎம் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இதுதான் தற்போது உலகில் இருப்பதிலேயே மிகவும் வேகமான கம்ப்யூட்டர் ஆகும். இந்த கம்ப்யூட்டர் கடந்த 2018ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்த நிலையில் துப்பாக்கி புல்லட்டை விட இந்த கம்ப்யூட்டர் வேகமாக செயல்படும் என கூறப்படுகிறது.

ஒரே நொடியில் இந்த கம்ப்யூட்டர் 2,00,000 டிரில்லியன் கணக்குகளை சோதனை செய்ய முடியும்.இந்த மொத்த கணக்குகளை ஒரு மனிதர் தனியாக செய்ய வேண்டும் என்றால் 6.3 பில்லியன் ஆண்டுகள் எடுக்கும்.

உலகில் இதைவிட வேகமான எந்திரம், கம்ப்யூட்டர் அதன்பின் கண்டுபிடிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here