உலகளவில் பலி எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது

ஜெனிவா –

உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உயிர்பலிகளை அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளையே ஆட்டம் காட்டி வருகிறது.

கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 13,025 ஆக உயர்ந்துள்ளது.

பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியுள்ளன, பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன, விமானம், பேருந்து, ரயில், கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here