கொரோனா பாதிப்பு குறித்து சோதனை

அதிகம் பேரிடம் சோதனை நடத்திய மாநிலங்கள் கேரளாவும் , மாராட்டிய மாநிலங்களாகும்.

திருவனந்தபுரம்,மார்ச் 24-

இந்தியாவில் ஏற்பட்டு உள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகளில் கிட்டத்தட்ட 36 சதவீதம் கேரளா மற்றும் மராட்டிய மாநிலங்களில் உள்ளது.

கேரளா மற்றும் மராட்டிய மாநிலங்களில் சமீபத்தில் ஒரு அதிவேக கொரோனா வைரஸ் பரவலை கண்டிருக்கின்றன. இந்த மாநிலங்கள் ஒப்பீட்டளவில் அதிக சோதனை விகிதங்களைக் கொண்டுள்ளன. இதில் கேரளா மிகப்பெரிய வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. மராட்டியம் மாநில புனே மாவட்டம் அதிக பாதிப்பு இல்லை என்று பதிவு செய்துள்ளது.

அதிகம் பேரிடம் சோதனை நடத்திய மாநிலங்கள் கேரளாவும் , மாராட்டிய மாநிலங்களாகும்.

36 மாநிலங்கள் / யுனியன் பிரதேசங்களில் 23ந்தேதி குறைந்தது ஒரு பாதிப்பையாவது பதிவு செய்துள்ளன.சோதனை செய்யப்பட்ட மாதிரிகளுக்கான தரவு சில மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்து உள்ளது. அவற்றில், கேரளா மிகப்பெரிய வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது, மேற்கு வங்கம் குறைந்த எண்ணிக்கையிலான மாதிரிகளை சோதனை நடத்தி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்திடம் கிடைத்த சமீபத்திய ஆனால் மதிப்பிடப்படாத தரவுகளின்படி, 87 மாவட்டங்களில் குறைந்தது ஒரு பாதிப்பாவது பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here