புத்ராஜெயா –
வைரஸ் தொற்று மிக மோசமான நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நாடு முழுவதும் 33 பெரிய மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.
கோவிட் – 19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நிலைமை மேலும் மோசமடையும் என்று அஞ்சுவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் கூறுகிறார்.
பல்கலைக்கழக மருத்துவமனை உட்பட 33 மருத்துவமனைகளில் எல்லா வசதிகளும் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். சுங்கைபூலோ மருத்துவமனையில் வைரஸ் காரணமாக ஏராளமான நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கும் தாதியர்களுக்கும் உதவுவதற்காக மேலும் பல மருத்துவப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர் என்றார் அவர்.