கவலையில் தனித்துவாழும் தாய்மார்கள் கலக்கத்தில் குடும்பமாதர்கள்

கோலாலம்பூர், மார்ச் 27-

மக்கள் நடமாட்டம் தீவிர கட்டுப்பாட்டைக்கொண்டிருப்பதால் பி40 பிரிவினர் வேலை இழப்பு, வருமான பாதிப்பை எதிர்கொள்ளக்கூடும் என்று நம்பப்படுகிறது.

தனித்து வாழும் தாய்மார்கள். சொக்சோ வருமானத்தையே நம்பியிருக்கின்றவர்கள். பெரும் சுமைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும்.

பிள்ளைகளின் நடமாட்டத்தில் நிறைய மாற்றங்களைச் செய்யவும் புகட்டவும் தயாராக வேண்டியிருக்கும். சில்லறை வணிகம் இல்லாமல் போகும். வருமானம் இழப்பை பிள்ளைகளிடம் காட்ட முடியாது.

கணவர் இழப்பால் கிடைக்கும் சொக்சோ பணம் செலவுகளுக்குப் போதாது, தையல் வேலை செய்வதற்கும் இது சரியான நேரம் இல்லை.

எந்தப்பக்கம் பார்த்தாலும் பண இழப்பு மட்டுமே தெரிகிறது. உதவிகள் எங்கு கிடைக்கும் என்பதும் தெரியவில்லை. யாரிடம் கிடைக்குமென்றும் தெரியவில்லை. மிகச்சரியான வழிகாட்டல்கள் வேண்டும்.

வழிகாட்டல்கள் என்ற பெயரில் ஏமாற்று இருக்கக்கூடாது தனித்து வாழும் தாய்மார்கள், அவர்களின் குழந்தைகள் அவர்களின் சிறுதொழில்ககள் என்றெல்லாம் முடக்கப்படுவது திண்ணம்.

இதற்கு கால வரையரை இல்லை என்பதால் என்ன செய்யப்போகிறோம் என்று விளங்கவில்லை என்கின்றனர் பல தாய்மர்கள். பிரதமர் அறிவித்த மாற்றுத்திட்டங்களால் பயன்கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே இருக்கிறது என்று பலர் கலக்கத்தில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here