கொரோனா நோயின் ஆரம்ப அறிகுறி

ஹுஸ்டன் –

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறியும் எளிய வழியை அமெரிக்கா கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது.
காய்ச்சல், இருமல், சளி என பல தொல்லைகள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இதையொட்டிய புதிய தகவலை அமெரிக்க காது, தொண்டை நோயியல் அகாடமியின் தலைமைச் செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி இல் வெளியிட்டுள்ளார்.

அதாவது, ஒருவருக்கு ஒவ்வாமை, சைனஸ் அல்லது சளி போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி பொருட்களை முகர்ந்தால் மணம் தெரியாமல் போனாலும் உணவுகளை சுவைத்தால் நாக்கில் சுவை தெரியாமல் போனாலும் அது கொரோனா வைரசின் ஆரம்ப கால அறிகுறிகள் என அவர் தெரிவித்துள்ளார்.

இப்படி முகர்ந்தால் மணம் தெரியாமலும் நாக்கில் சுவையை ருசிக்க முடியாமல் போனாலும் அவர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாம் என முடிவுக்கு வந்து அதற்கான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்; அத்துடன் தங்களை அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளவும் வேண்டும் என்று அவர் பரிந்துரைத்து உள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான பலரும் தங்களுக்கு ஆரம்பத்தில் வாசனையும் சுவையும் தெரியாமல் போனதாகக் கூறி உள்ளனர். ஒரு சிலர் மட்டும் கொரோனா வைரஸ் தாக்கி சில நாட்களில் தான் தங்களுக்கு வாசனை தெரியாமலும் நாக்கில் சுவை உணர முடியாமலும் போனதாக கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here