ஹூபே மாகாணத்தில் கொரோனா புரட்சி

கொரோனா புரட்சி

பெய்ஜிங், மார்ச் 31-

சீனாவின் ஹூபே மாகாணத்தில் மூன்றாவது நாளாக கொரோனா புரட்சி மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஹூபே மாகாணத்தின் தலைநகர் வூஹான். இரண்டு மாத ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு இங்கு வசிக்கும் 60 லட்சம் பேரும் நகரை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகிறார்கள்.

வசிப்பதற்கு ஏற்ற இடமல்ல எனக் கருதும் மக்கள் இங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள்.அவர்களின் இலக்கு ஷாங்காய் நகரமாக உள்ளது.

ஒரே நேரத்தில் மக்கள் வெளியேறுவதால் காவல் துறைக்கும் மக்களுக்கும் கடும் சண்டை தொடர்ந்து வருகிறது.

சீன கம்யூனிச அரசாங்கம் தங்கள் உயிருக்கு விலை வைத்து விட்டதாக மக்கள் மத்தியில் புரட்சி ஏற்பட்டுள்ளது.

ஒரு சேர மக்கள் வெளியேறுவதால் பொது போக்குவரத்து நிலைகுத்தியுள்ளது.

சீன அரசாங்கத்துக்கு இந்த புரட்சியானது புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் மேற்குப் பகுதி மலைப் பிரதேசங்களுக்குப் பிறகு வரும் முக்கிய நகரமான வூஹான் பேய் நகரமாக மாறி விடுமோ என்ற அச்ச நிலையும் ஏற்பட்டு வருகிறது.

மக்களைக் கட்டுப்படுத்தி நகருக்குள்ளேயே தங்க வைக்க சீன அரசாங்கம் படாத பாடுபட வேண்டிய நிலையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here