ரமலான் பஜார் நடத்த வேண்டாம் – ஜோகூர் சுல்தான் கோரிக்கை

ஜோகூர் பாரு: கோவிட் -19 இன் தாக்கத்தின் காரணமாக  ரமலான் பஜாரை நடத்த வேண்டாம் என்று ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இம்னி அல்மர்ஹம் சுல்தான் இஸ்கந்தர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

தினசரி  புதிய சம்பவங்கள்  கண்டறியப்பட்டு வருவதால், அதிக மக்கள்  கூட்டங்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு நிகழ்வையும் நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என்றும்  அவரது பேச்சாளர்  கூறினார். மக்கள் நடமாட்ட கட்டுபாட்டின் முழுமையை முதலில் அடைய வேண்டும். இது எங்கள் முன்னுரிமையும் அக்கறையுமாகும்.

“ரமலான் பஜார் நமக்காக காத்திருக்கும்” என்று அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூலில் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும், வீட்டிலேயே இருக்க வேண்டும், சுகாதார அதிகாரிகள் அனைத்தையும் தெளிவுபடுத்தும் வரை மற்றவர்களுடன் எந்த தொடர்பையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை (எம்.சி) நாம் பின்பற்றினால் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும்.  பின்பற்றா விட்டால்  அது  நமது சுகாதார அமைப்பின் வளங்களை மேலும் திணறடிப்பதோடு சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற முன்னணி லைனர்களை இன்னும் அதிக ஆபத்தில் ஆழ்த்தும். மேலும் சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலும் ஒட்டுமொத்த நாட்டிலும் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

“நிலைமையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளாதீர்கள்.  எந்தவொரு பொதுக் கூட்டத்தையும் நடத்த வேண்டாம். இந்த கொடிய நோயின் பரவலைக் கட்டுப்படுத்தவும் போராடவும் அனைவரும் தங்கள் பங்கை வகிக்க வேண்டும். நாம் அனைவரும் விரைவாக ஒத்துழைத்து இயல்பு நிலைக்கு திரும்ப வழி வகுப்போம் என்று அவர் வலியுறுத்தினார்.

கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு உதவ வேண்டிய நேரம் இது என்றும் சுல்தான் கூறினார். தயவுசெய்து அரசியலை மறந்து விடுங்கள். இந்த நெருக்கடியிலிருந்து நம் நாட்டை காப்பாற்ற நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம், ”என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here