வாஷிங்டன்,ஏப்ரல் 4-
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடுகிறது. வல்லரசு நாடான அமெரிக்கா தான், கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தற்போது உள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 277,161 ஆக உள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசுக்கு 1,480 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பெருந்தொற்று பரவிய பிறகு, அமெரிக்காவில் ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச உயிரிழப்பு இதுவே ஆகும். ஒட்டு மொத்தமாக அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 7,406 ஆக உள்ளது. இந்தத் தகவலை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவித்துள்ளன.