வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி – நான் மறந்த என் முதல் பிறந்தநாள்: டத்தோ ரகுமூர்த்தி

கோவிட் 19 தொற்றினால் உலகமே துவண்டு கொண்டிருக்கும் இந்த நாட்களில் என் பிறந்த நாளை பத்திரிகையில் வாழ்த்துகளாக பார்த்தபோது மனம் நெகிழ்ந்து போனேன். வருடந்தோறும் என் அன்புள்ளங்களும் என் குடும்பமும் என் பிறந்தநாளுக்கான ஏற்பாடுகளுகளை முன்கூட்டியே செய்ய தொடங்குவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு நான் உட்பட  என் குடும்பம் இதை மறந்து விட்டோம் என்றே சொல்ல தோணுகிறது. பல வீடுகளில் அடுப்பு எரியாத சூழலிலும் பல குடும்பங்கள் அன்றாட உணவுக்கே பரிதவிக்கும் நிலையிலும் நம் நாடு நாளை என்ன நடக்கபோகிறது என்று ஏங்கும் நிலையிலும் என் பிறந்த நாள் கொண்டாட்டத்தை நான் தவிர்த்திருப்பது என் மனதளவில் சரியாகவே தோன்றுகிறது.

கடந்த வருடங்களில் எனக்கு இனிப்பு வழங்கிய என் பணியாளர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கு என்னாலான இனிப்பான சம்பவங்களை இந்த இக்கட்டான சூழலில் செய்ய களம் இறங்கியிருக்கிறேன்.

தொடர்ந்தும் என் சக்திகேற்ப நம் மக்களுக்கு உதவிகளை ஓயாமல் வழங்கி கொண்டிருக்கிறேன். இந்த சூழலிலும் என்னை மனதில் நிறுத்தி மறவாமல் பத்திரிகையில் வாழ்த்து சொல்லிய அன்பான இதயங்கள் என் உயிருள்ள வரை மறக்கப்பட மாட்டார்கள் என்று காயத்ரி பட்டுமாளிகை உரிமையாளரும் மலேசிய இந்திய ஜவுளி கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவரும் தலைவருமான டத்தோ ஆர்.ரகுமூர்த்தி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here