கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக விமான சேவைகள் முடக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி பன்னாட்டு விமான சேவையும், மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்பட்டது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு அதற்கான தொகை முழுவதும் விமான நிறுவனங்களின் இருப்பில் இருக்கும்.
டிக்கெட் முன்பதிவு செய்து ஊரடங்கால் ரத்து ஆனதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணம் திருப்பி வழங்கப்பட மாட்டாது.
பணத்துக்கு பதிலாக அந்த டிக்கெட்டை 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் பயன்படுத்தி கொள்ளலாம் என விமான நிறுவனங்கள் டுவிட்டரில் அறிவித்து உள்ளன.
ஆனால் ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டின் முழு தொகையையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.
ஆனால் பிப்ரவரி மாதம் முதல் விமான பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டன.
மேலும் ஊரடங்கு காலத்தில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் தொகை வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால் சிறப்பு சலுகையாக அந்த தொகையில் ஓராண்டிற்குள் டிக்கெட் எடுத்து பயணத்தை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.