பெட்டாலிங் ஜெயா , ஏப்.14-
மலேசியர்கள் கோவிட் 19 தொற்றுக்கு பயனுள்ள தடுப்பூசி உருவாக்கப்பட்டு பரவலாகக் கிடைக்கும் வரை அடுத்த 12 முதல் 18 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கும் கோவிட்-19 உடன் வாழ வேண்டியிருக்கும் என்று என்று ஜசெக வின் லிம் கிட் சியாங் தெரிவித்திருக்கிறார்.
மக்கள் நடமாட்டக் கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணை மிக முக்கியமான படிப்பினையை ஏற்படுதியிருக்கிறது. சமூக நெருக்கம் என்பது தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் மிக முக்கியமான புதிய மாற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கோவிட் -19 பரவலின் இரண்டாவது அலையின்போதே தடுப்புமுறை தீவிர் மடைந்திருக்கவேண்டும் என்று லிம் கூறினார், ஏனெனில் முதல் அலை ஒற்றை இலக்கத்த்லேய்யே இருந்தது. அதன் தினசரி அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 16 வரை மொத்தம் 22 வழக்குகளை எட்டியது.
பிப்ரவரி 16 முதல் 26 வரையிலான 10 நாட்களில், கோவிட் -19 இன் புதிய தொற்று எதுவும் இல்லை இல்லாமல் இருந்தது.
கவனக்குறைவு, அலட்சியம் ஆகியவற்ரின் காரணமாக விலையுயர்ந்த பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று., இந்தான் கோவிட் -19 இன் இரண்டாவது அலை நடக்க காரணமாயிற்று. மார்ச் 18 க்குபின் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு ஏற்பட காரணமாகவும் அமைந்தது.
மக்கள் நடமாட்டக் காட்டுப்பாடு அமல்படுத்தப்படுமுன் ஜே.பி. மோர்கன் ,மலேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் (MIER) செய்த முன்கணிப்பை தவிர்த்துவிட்டதையும் அவர் மேலும் கூறினார் .