பெட்டாலிங் ஜெயா, ஏப்.17-
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தமது வாழ்த்துகளை முன்னாள் நிதியமைச்சரும் ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் (ஜசெக) பொதுச்செயலாளரருமான லிம் குவான் எங் கிற்குத் தெரிவித்துக்கொண்டார்.
தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியான லிம், இவ்விவரத்தை ட்வீட் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவுக்கு பதிலளித்த துன் டாக்டர் மகாதீர், குவான் எங் வேகமாக குணமடைவார் என்றும். வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறும் குறிப்பிட்டிருந்தார்.
மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டின் ஆணைக்கு இணங்க வீட்டில் ஓய்வெடுத்துக்கொள்ளுமாறு அப்பதிவு இருந்தது.