கோலாலம்பூர், மே 2-
மலேசியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கத்தை எட்டியுள்ளது.
102 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்றாலும் இதர பெரும்பான்மை உலக நாடுகளைக் காட்டிலும் இங்கு குறைவாகவே உள்ளது ஆறுதல் அளிக்கிறது.
புதிதாக கொரோனா தாக்கத்திற்கு ஆளானவர்களுள் 13 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் மலேசிய குடிமக்களின் மத்தியில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதையே காட்டுவதாக சுகாதார தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ டாக்டர் நோர்ஹிஷாம் அப்துல்லா கூறியிருக்கிறார்.
பொருளாதார மீட்சிக்காக ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் மலேசியர்கள் இன்னமும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.