மை 100, மை 50 அட்டைகளைப் புதுப்பிக்கலாம்

கோலாலம்பூர்:புதிய நிபந்தனை அறிவிப்பின் மூலம் மை 100 , மை 50 பயண தவணை பாஸ் பயனர்கள் தங்கள் கட்டணம் ஏற்றுதலை புதுப்பிக்க முடியும்.

எல்.ஆர்.டி, எம்.ஆர்.டி, மோனோரெயில், பி.ஆர்.டி நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பஸ் மையங்களில் உள்ள அனைத்து வாடிக்கையாளர் சேவை முகப்பிலும் புதுப்பித்தல் செய்துகொள்ளலாம் என்று பிரசரனா மலேசியா பெர்ஹாட் குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரி முஹம்மது நிஜாம் அலியாஸ் தெரிவித்தார்.

மார்ச் 18 முதல் இயக்கம் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) அமல்படுத்தப்பட்டதிலிருந்து தங்களது வரம்பற்ற பயண பாஸை தொடர்ந்து பயன்படுத்த முடியாத மை 100, மை 50 பாஸ் பயனர்களைப் பற்றி பிரசரனா கவலை கொண்டுள்ளது.

காலாவதியான பாஸ்களைப் புதுப்பிக்கும் அல்லது புதிய பாஸ்களை வாங்கும் பயனர்களுக்கு, அடுத்த வாரம் தொடங்கி, சந்தாதாரர்களுக்கு 15 நாள் நீட்டிப்பை இலவசமாக வழங்குவதாகவும் அது கூறியது.

எனவே, ஒட்டுமொத்தமாக, அவர்கள் 45 நாள் வரம்பற்ற பயணத்தை ஒரே விலையில் பெறுவார்கள் என்று முகம்மது நிஜாம் அலியாஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்தார், இது குறித்து www.myrapid.com.my ஐப் பார்வையிடுவதன் விவரங்கள் அறியலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here