திருச்சி,மே 09-
காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் புதிய வகை முகக்கவசத்தை திருச்சி மருத்துவர் ஏ.முகமது ஹக்கீம் வடிவமைத்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், முகக்கவசம் அணி யாமல் வெளியில் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
கரோனா வைரஸ் தீவிரம் குறையும் வரை அனைவருமே முகக்கவசம் அணிவது அவசியம் என்று அறிவுறுத்தப்படும் நிலையில், காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக புதிய வகை முகக்கவசத்தை திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ஏ.முகமது ஹக்கீம் வடிவமைத்துள்ளார்.
தற்போது அனைவருமே முகக்கவசம் அணிந்திருப் பதால் மற்றவர்கள் பேசுவதை காதுகேளாத மாற்றுத்திறனாளி களால் புரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது.
காதுகேளாத மாற்றுத்திற னாளிகள் பலரும் பல வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங் களில் வேலை பார்த்து வருகின் றனர். இவர்களிடம் ஏதேனும் சொல்ல விரும்பினால், பேசுபவர் முகக்கவசத்தை விலக்கி விட்டு தான் தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, தற்போது பயன்படுத்தும் முகக்கவசத்தின் வாய்ப் பகுதியை வெட்டி அகற்றிவிட்டு, அந்த இடத்தில் மூச்சு விட சிரமம் ஏற்படாத வகையில் (latex free) பேப்பரை வைத்து ஒட்டி வாய் அசைவை காதுகேளாதவர்கள் பார்க்கும் வகையில் வடிவமைத்துள்ளேன். எளிய முறைதான் என்றா லும், காதுகேளாத மாற்றுத் திறனாளிகளுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் இதுபேரு தவியாக இருக்கும்.
இதற்கு அரசிடம் முறையான அனுமதி பெற்று, தேவைப் படுவோருக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளேன். இதை பிறருக்கு உதவ எனக்கு கிடைத்த வாய்ப்பாகவே கருது கிறேன், வணிக நோக்கம் எதுவும் கிடையாது என்றார்.