ரமலான் பெருநாளுக்கான அத்திவாசிய உணவுப் பொட்டலங்கள்

ருக்குன் நெகாராவின் 5ஆவது கோட்பாட்டிற்கேற்ப கன்ட்ரி ஹைட்ஸ் ஹோல்டிங் பெர்ஹாட் நிறுவனர் டான்ஶ்ரீ லீ 5 கிம் யூ பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்.

கோவிட் 19 தொற்று அனைத்துலக ரீதியில் பரவியதால்  நம் நாட்டில் மார்ச் 18   முதல் மக்கள் நடமாட்டக்  கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) தொடங்கியபோது ஒரு இலாப நோக்கற்ற முயற்சியாக உதவிகளை வழங்கத் தொடங்கினார்.

ஜாவி உணவு வங்கிக்கு தொற்றுநோய்களின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கும் விநியோகிக்க அத்தியாவசிய உணவு வழங்கப்பட்டது.  ஜாவி  உணவு வங்கியின் #Musaadah Covid19 முன்முயற்சியாக  1,000 உணவு கூடைகள் வழங்கப்பட்டன.  5 கிலோ அரிசி, மாவு, உடனடி நூடுல்ஸ், சர்க்கரை, வேகவைத்த பீன்ஸ், போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய உணவுப் பொருட்கள் அவையாகும்.

முதல் கட்டமாக ஏப்ரல் தொடக்கத்தில் 5 கிலோ அரிசி, 30,000 முகக்கவசம், சமைத்த உணவு மற்றும் ரோட்டி செனாய் ஆகியவற்றின் 1000 பைகள் நன்கொடை அளித்த பின்னர், ஜாவி உணவு வங்கிக்கு வழங்கிய இரண்டாவது  கட்ட பங்களிப்பு இதுவாகும். டான் ஸ்ரீ லீ கிம் யூ,  கூட்டரசு பிரதேச  இஸ்லாமிய சமய இலாகாவின் இயக்குநர் ஹாஜி மொஹமட் அஜிப் இஸ்மாயில் வசம் பேலஸ் ஆ@ப் கோல்டன் ஹார்ஸில் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த பங்களிப்புகள் நாட்டில் சிரமத்தையும் நெருக்கடியையும் எதிர்கொள்ளும் மலேசிய சமூகத்தின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் பிரதிபலிப்பாகும்.  உணவுப் பாதுகாப்பு என்பது இப்போது ஒரு முக்கியமான பிரச்சினையாகும், குறிப்பாக இந்த மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டின் விரிவாக்கத்தின் போது போதுமான உணவு வழங்கல் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும், எனவே இந்த அத்தியாவசிய உணவு நன்கொடை ஜாவிக்கு பேருதவியாக இருக்கும்.

கூட்டரசு பிரதேச  இஸ்லாமிய சமய இலாகாவின் (JAWI) கருத்துப்படி, மக்கள் நடமாட்டக்  கட்டுப்பாட்டு ஆணை  மார்ச் 18 தொடங்கப்பட்டதிலிருந்து  ஜாவி உணவு வங்கி 1,077,825 வெள்ளி மதிப்பிலான  120,878 உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.  இந்த உதவி இனம், மதம், சமயம் என்று பாராமல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்த ரமலான்  நோன்பு 50 வெள்ளி  பெருமானமுள்ள  உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம்.  இந்த உணவுப் பொருள் ஒரு குடும்பத்திற்கு 7 முதல் 10 நாட்கள் வரை உணவுப் பொருட்கள் நீடிக்கும்.

https: //www.facebook.com/bantubantumalaysia/ உதவி மலேசியா: உதவி மலேசியா என்பது ஒரு இலாப நோக்கற்ற சமூக முன்முயற்சி ஆகும், இது ‘ குணப்படுத்துவதை விட தடுப்பதே சிறந்தது’ என்று ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. 30 லட்சம் முகக்கவசங்களை முன்னணி பணியாளர்களும் மற்றும்  3லட்சம் தரம் மற்றும் சான்றிதழ் கொண்ட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் 10,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளான சுங்கை பூலோ மருத்துவமனை,  மலாயா மருத்துவ மையம், புத்ராஜெயா மருத்துவமனை, ஷா ஆலம் மருத்துவமனை, கோத்தாபரு போன்ற பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வென்டிலேட்டர்கள், கண்ணாடிகள் வழங்கப்பட்டன. ஆதரவற்ற  இல்லங்கள்,  தனித்து வாழும் தாய்மார்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பேலஸ் ஆஃப் கோல்டன் ஹார்ஸ் சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும்  வசதி குறைந்தோருக்கு உணவுப் பொருட்களை விநியோகித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here