மாபெரும் எதிர்பார்ப்புகளுடன் மக்களைவை கூடும் என்ற எண்ணத்தில் இடிவிழுந்திருப்பதாகவே இருக்கிறது. பல அரசியல் விவாதங்கள் சூடு பறக்கும் என்ற எதிர்ப்பார்ப்புகளில் உப்புச் சப்பில்லாமல் போய்விடும் என்று பத்துக்கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மிக சாதுர்யமாக அரசிய சதுரங்கக் காயை நகர்த்துவதாக அவரின் வார்த்தை இருக்கிறது.
ஒருநாள் நாடாளுமன்றம் எந்தப் பிரச்சினைக்கும் வழிகாட்டுதலாக அமையாது என்பது எதிர்பார்பாளர்களின் பொதுக்கருத்தாக இருக்கிறது. ஆனால், பிரதமரின் பதில் என்ன வாக இருந்தது. இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ஓரளவு அனைவருக்கும் தெரிந்தது தான்.
இதற்கு பத்துக்கவான் நாடாளுமன்ற கஸ்தூரி பட்டு என்ன சொல்கிறார் என்பதும் புறக்கணிப்பதற்கில்லை.
கோவிட் -19 இன் நிலைமை, கட்டுப்படுத்தும் வழி வகை, வேலையிழப்பு, கல்வி, பாலியல் பிரச்சினைகள், பாதுகாப்பு ஆகியவற்றை விவாதிப்பதிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காகவும் பதவியைத் தற்காத்துக் கொள்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பதாவும் பதிவுகளை முன்வைக்கிறார் அவர்.
கொரோனா தொற்று பாதுகாப்பை முன்வத்து அதன் தொடர்பான ஒருநாள் மக்களவை நடக்க வாய்ப்பாக இருக்கும்போது, இதே பாணியில் வாராவாரம் கூட்டத்தை ஏன் நடத்தக்கூடாது என்கிகிறார் கஸ்தூரி பட்டு.
மக்களவை என்பது நாட்டின் வளப்பத்திற்கு உரியவற்றை விவாதிப்பதற்குரிய இடமாகும். அப்படி நடப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை.
இன்றைய பிரச்சினை கொரோனா தொற்று. அதற்கு மட்டுமே மக்களவை என்பது பொருத்தானதே என பிரதமர் கூறுகிறார்.
கொரோனா என்பது மக்களின் இன்றியமையாத பிரச்சினை. அதற்குத் தீர்வு காண்பதில் ஒரு நாள் மக்களவை பெரும் பங்காற்றும் என்பதிலும் நியாயம் இருக்கிறது. ஆட்சியை விட, தொற்று நோயிலிருந்து மக்களைக் காப்பதுதானே முக்கியம் என்ற பிரதமரின் கூற்று ஏற்புடையது தானே!