14ஆவது கெடா மாநில மந்திரி பெசாராக முகமட் சனுசி நியமனம்

அலோர் ஸ்டார் (பெர்னாமா): ஜெனெரி மாநில சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது சனுசி எம்.டி நோர் (படம்) புதிய மந்திரி பெசாராக நியமனம் செய்ய கெடா மாநில சுல்தான் சல்லாஹுதீன் இப்னி அல்மர்ஹம் சுல்தான் பத்லிஷா ஒப்புதல் அளித்துள்ளார்.

14 வது மந்திரி பெசாரின் பதவியேற்பு விழா இன்று மே 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஸ்மா டாரூல் அமானில் உள்ள கெடா சுல்தான் அலுவலகத்தில் நடைபெறும் என்று கெடா மாநில செயலாளர் டத்தோ அம்மர் ஷேக் மஹ்மூத் நைம் தெரிவித்தார்.

முன்னதாக, மே 15 அன்று சுல்தான் கெடா அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்ததாகவும், அவர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு இனி டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீருக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கெடா மாநில அரசியலமைப்பின் பிரிவு 37 (6) இன் படி, டத்தோஶ்ரீ முக்ரிஸ் மந்திரி பெசார் மற்றும் இன்று மாநில நிர்வாக கவுன்சிலர்கள் பதவியிலிருந்து விலகுவதற்கு அவரது மாட்சிமை ஒப்புக் கொண்டுள்ளது.

கெடா மாநில அரசியலமைப்பின் 35 மற்றும் 37 (2) (அ) பிரிவுகளின் கீழ் உள்ள விதிமுறைகளுக்கு இணங்க, பெரும்பான்மையான மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருப்பதால், ஜெனெரி மாநில சட்டமன்ற உறுப்பினரை புதிய மந்திரி பெசாராக  நியமிக்க அவர் சம்மதித்ததாக  அவர்  செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். – பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here