இந்தியர்களின் பிரச்சினைகளை களைய மஇகாவின் “உதவி” செயலி அறிமுகம்

கோலாலம்பூர், மே 18-

இந்நாட்டில் இந்தியர்கள் எதிர்நோக்கக் கூடிய பிரச்சினைகளை களைய மஇகாவின் முயற்சியில் உதவி எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கல்வி, வேலை, வாய்ப்பு, சமூகப் பிரச்சினைகளை கொண்டிருக்கும் இந்தியர்களை அடையாளம் காணவும் அவர்களின் தரவுகளை வைத்து உதவிகளை வழங்கவும் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

குறிப்பாக இந்த கோவிட்-19 தொற்று நோய் காலக்கட்டத்தில் விதிக்கப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் உதவிகளை எதிர்பார்க்கும் மக்களுக்கும் இந்த செயலி வழி உதவிகளை வழங்க மஇகா முயற்சிக்கிறது.

இந்த செயலியின் மூலம், நாடு முழுவதும் உள்ள இந்தியர்களின் பிரச்சினைகளை எங்களால் அறிய முடியும். அதன் மூலம் பிரச்சினைகளுக்கான தீர்வை மஇகா மேற்கொள்ளும்.

உதவி நாடுபவர்கள், வேலை இல்லாத் திண்டாட்டம், கல்வி பிரச்சினை போன்ற அனைத்தையும் மக்கள் இந்த செயலி மூலம் மஇகாவுக்கு தெரியப்படுத்தலாம்.
இது மஇகா உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல அனைத்து இந்தியர்களுக்மானதாகும்.
இந்தியர்கள் மட்டும் இல்லாமல் மற்ற இனத்தவர்களும் இதன் மூலம் பிரச்சினைகளை சொல்லலாம்.

மஇகா தலைமையகத்தில் இந்த செயலியை நிர்வகிக்க தனிக் குழு இயங்கும். உதவி நாடுபவர்களும் உதவி செய்ய விரும்புபவர்களும் தங்களின் தகவல்களை அந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலமே வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களின் தெளிவான விவரங்களை மஇகா அறிந்துக் கொள்ள முடியும்.

இந்த செயலியை மக்கள் தற்போதைக்கு இணையத்தில் சென்று பார்க்கலாம். உதவி தேவைப்படுபவர்கள் அதில் தங்களின் தகவல்களை பதிவு செய்யலாம்.

இம்மாதம் இறுதிக்குள் அந்த செயலியின் முழு வேலைகளும் பூர்த்தியான பின் அதை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று நேற்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற உதவி செயலியின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here