மலேசிய சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் ( மகாஸ்) ஏற்பாட்டில் இந்த தர்ம சங்கடமான Covid-19 காலகட்டத்தில் ,சிகை அலங்கரிக்கும் தொழிலில் ஈடுபட முடியாமல் பண சுமையை எதிர்கொண்ட அனைத்து இந்திய சகோதர சகோதரிகளுக்கும் மகாஸ் இயன்ற உதவிகளை செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவர் ஏ.கே.செல்வன் தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிகை அலங்கார உரிமையாளர்களின் விபரங்களும் திரு.முகிலன் ஏற்பாட்டில் சேகரிக்கப்பட்டது.அவை அனைத்தையும் பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு நிதி கோரிக்கை மனுவுடன் சேர்த்து சமர்ப்பித்துள்ளோம். அரசாங்கம் பாதுகாப்பு கருதி முடிதிருத்தும் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே.வருமானம் இல்லாத்தால் பல முடிதிருத்தும் கடைகள் வாடகை செலுத்த முடியாமல் மூடு விழா கண்டு வருகின்றன.
இந்நிலை தொடர்ந்தால்,மலேசியாவில் இந்திய பாரம்பரிய தொழிலான இச்சிகையலங்கார தொழில், இருந்ததற்கான சுவடே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். ஆகவே,நமது பிரதமர் விரைவில் எங்களது கோரிக்கை மனுவை ஏற்று எங்களின் பணசுமையை களைய முயற்சிகளை மேற்கொள்வார் என தாம் நம்புவதாக திரு.ஏ.கே.செல்வன் தெரிவித்தார்.