மனமே சுகமா என்று இனி யாரேனும் கேட்டகத் துணியவே மாட்டார்கள். அப்படியொரு நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆதலால், மனமே நலமா என்று சட்டென்று கேட்டுவிடமுடியாது.
கொரோனா பாதிப்பின்போது உலக மக்கள் கொரோனா நினைப்பிலேயே இருப்பதால் மனம் வெகுவாகக் கெட்டுக்கிடக்கிறது என்பதை லண்டன் பலகலைக்கழக ஆய்விதழ் பலமாக முன்வைத்திருக்கிறது.
நோயாளிகளில் நான்கில் ஒருவர் மனப்பாதிப்புக்கு ஆளாகிறார் என்கிறது அந்த ஆய்விதழ். இந்த ஆய்வுகளை நம்பித்தான் ஆகவேண்டும். நம்புவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்த ஆய்வுகளில் பல உண்மைகள் வெளிபட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
இதில் சங்கடமான செய்தி ஒன்று இருக்கிறது. இது மன அழுத்தத்தை மேலும் அதிகமாக்குகிறது. கொரோனா பாதிப்பில் சிக்கியவர்களுக்கு தீவிர மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதுதான் அது. இதனால், ஏற்படும் பாதிப்புகளும் அதிகம் என்பதால், அடுத்த கட்ட மருத்துவத்திற்கும் ஆய்வுகள் தேவை என உணரப்பட்டிருக்கிறது
இதிலுள்ள சிக்கல் என்னவெனில், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படுமானால் அவருக்கான குணமடைதல் வெகு தாமதமாகும் அல்லது பலனளிக்காமல் போகலாம் என்று அந்த ஆய்விதழ் செய்தியளித்திருக்கிறது.
மலேசிய மருத்துவம் மனநிலைப் பாதிப்பை ஏற்றுக்கொண்டதா என்பது இன்னும் தெரியவில்லை. என்றாலும் இப்பிரச்சினை மலேசிய மருத்துவதுறைக்கு ஓர் ஆதாரமாக இருக்க உதவும் என்றும் நம்பலாம்.
மலேசியர்களைப் பொறுத்தவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் மனநிலை பாதிக்கப்படிருக்கலாம் என்பது அறியப்படவில்லை. மருத்துவத்தின் மீதே குறியாக இருந்திருப்பதைத்தான் அறிய முடிகிறது.
மனநிலை என்பது மருத்துவத்தின் மறுபதிப்பு. மருத்துவர்கள் மருத்துவத்தோடு இதற்கும் வழிகண்டால் மருத்துவத்திற்குக் கூடுதல் நன்மையாக இருக்கும்.
மருத்துவத்திற்குப்பின் ஞாபக மறதி ஏற்படும் என்பதில் நிறைய சிக்கல் இருக்கிறது. அவர்களாகவே மருந்துமாத்திரைகள் எடுத்துக்கொள்ள முடியாது. அதனால் பதட்டம் ஏற்படும். குழப்பமடைவார்கள். மனப்பிரமையில் இருப்பதினால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பிரச்சினை அதிகமாகும். அவர்களும் மனப்பாதிப்புகள் ஏற்படும். குழப்பம் இருக்கும். ஆதாலால் கொரோனா பாதிப்பில் உள்ளவர்களுக்கு மனநல மருத்துவமும் வழங்கப்படல் வேண்டும்.
மருத்துவத்தில் மலேசிய வளர்ச்சி உலகப்புகழ் கொண்டதாக ஆகிவருகிறது.