கோவிட் தாக்கத்தை தொடர்ந்து அரசாங்கம் அறிவித்த தேசிய உதவி நிதி திட்டத்தில் 4,000 டாக்சி ஓட்டுனர்களுக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை என ஓட்டுனர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரத்தில் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலையிட வேண்டும் என்று ஓட்டுனர்கள் கேட்டுக் கொண்டனர்.
இத்திட்டத்தில் டாக்சி ஓட்டுனர்கள் 600 வெள்ளி வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 40,000 ஓட்டுனர்களுக்கு பல்வேறு காரணத்தினால் பணம் கிடைக்காமல் இருப்பதாக மலேசிய டாக்சி ஓட்டுனர்கள் கூட்டமைப்பின் தலைவர் கமாருடின் முகமட் ஹூசெய்ன் கூறினார்.
இந்த உதவி திட்ட நிதி அனைத்து டாக்சி ஓட்டுனர்களுக்கும் தடையின்றி கிடைக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்கு அதிகாரப்பூர்வ கடிதத்தை நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் வழங்கியதாக அவர் கூறினார்.
ஓட்டுனர்கள் அடிக்கடி அவர்களின் அபாட் அட்டையின் தகவல்களை மாற்றிக் கொண்டிருப்பதால் கூட சிலரின் பெயர்கள் விடுபட்டிருக்கலாம். அபாட் களைக்கப்பட்ட பின்னர் ஜேபிஜேவில் பதிவு செய்திருக்க வேண்டும்.
மேலும், இக்காரணங்களுக்காக ஓட்டுனர்களின் பெயர்கள் விடுப்படாமல் இருக்க நடமாட்டக் கட்டுபாடு பிறப்பிக்கப் பட்ட மே 31ஆம் தேதியிலிருது 2 ஆண்டுகள் மீறாத ஓட்டுனர்களின் தகவல் அட்டை வழிமுறையை அரசாங்கம் பின்பற்றலாம் என்று அக்கூட்டமைப்பு வலியுறுத்தியது.