பல்வேறு குற்றங்களுக்காக 387 பேருக்கு கம்பாவுன் விதிக்கப்பட்டது

பல்வேறு குற்றங்களளுக்காக கிட்டத்தட்ட 387 பேருக்கு கம்பாவுன் விதிக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.

அதில் ராயா கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட 31 பேருக்கும் சாலை தடுப்புகளில் 194 பேருக்கும் கம்பாவுன்ட் விதிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் யாரும் பின்பற்றுவதில்லை. அனுமதி இன்றி மாநில கடக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது கம்பாவுன்ட் விதிக்கப்படும்.

சொந்த ஊர்களுக்குச் செல்வதாக கூறி நெடுஞ்சாலையில் சிக்கிய 738 வாகனமோட்டிகளை போலீஸார் திருப்பி அனுப்பினர். சிலாங்கூரில் 317, மலாக்காவில் 89, கெடாவில் 80 வாகனங்கள் மாநிலம் கடக்க முயன்றுள்ளன.

நிபந்தனைகளுடனான நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறிய குற்றத்திற்காக நேற்று 65 பேரை போலீஸார் கைது செய்தனர். அதில் 57 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 8 பேர் ஜாமீனில் விடப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here