என்எஸ்இ நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தினால் கடுமையான வாகன நெரிசல்

ஈப்போ: பெஹ்ராங்கிற்கு அருகே வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வடக்குப் பாதையில் 389 கிலோ மீட்டரில்  டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கருடன் அவரது வாகனம் விபத்துக்குள்ளானதில் வேன் டிரைவர் கொல்லப்பட்டார்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை (மே 27) பிற்பகல் நடந்த சம்பவத்தில் வேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் வேனில் இருந்த மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்றார்.  மேலும் அவர் கூறுகையில் டேங்கர் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அடுத்த கட்ட  நடவடிக்கைக்காக சுகாதார அமைச்சக பணியாளர்கள் மற்றும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 டீசல் கசிவு இருந்ததால், பாசீர் புத்தேவிலிருந்து திணைக்களத்தின் அபாயகரமான பொருட்கள் பிரிவு விபத்து நடந்த இடத்திற்கு திரண்டனர்  என்று அவர் கூறினார். இந்த விபத்து சாலையின் இருபுறமும் கடுமையான  போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. சேதமடைந்த டேங்கர் அதிவேக நெடுஞ்சாலையின் வடக்குப் பகுதியில் மூன்று பாதைகளையும் அடைத்திருந்தது. பணத்தை ஏற்றி வந்த வேன், சாலை டிவைடரில்  மோதி சாலையின் தென்பகுதி சாலைக்கு வந்தததாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here