பட்டர்வொர்த் என்பதன் வார்த்தையின் அழகின் மாசுபட்டதுபோல் அங்குள்ள குடியிருப்புகள் குப்பைகளால் சீர் கெட்டுக்கிடப்பதை படம்போட்டு காட்டியிருந்தார்கள். இப்படத்தால் அந்நகர் அசிங்கப்பட்டதாகப் பொருளில்லை. அசிங்கமானவர்களின் ஆக்கிரமிப்புதான் காரணம் என்பது மிகத்தெளிவாயிற்று.
சுத்தமாக இருப்பது கொரோனாவுக்குப் பிடிக்காது என்று ஆகிவிட்டது. கொரோனா அசுத்தத்தின் இருப்பிடமாய இருக்கிறது என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை. அதுதான் உண்மை என்றும் படங்கள் காட்டுகின்றன.
அந்நிய தேசத்தை நட்பாக நினைப்பது தப்பில்லை. அவர்களே அநீதியாக இருந்தால் அப்புறப்படுத்துவதில் தவறுமில்லை.
பினாங்கு தாமான் பிறை இண்டா பகுதியில் உள்ள அடுக்ககம் அந்நியர்களின் சுகவாசத் தளமாக இருப்பதை விமர்சிக்கத்தான் வேண்டியிருக்கிறது. இப்பிரச்சினை இங்குமட்டுமே இருப்பதாக அர்த்தமில்லை. நாடெங்கும் இருக்கின்றன.
சுத்தம் கிலோ என்ன விலை என்று பேரம் பேசுகின்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்று கூறாவிட்டால் மலேசியர்கள் அசுத்தமானவர்கள் பட்டியலில் சேர்ந்துவிடுவார்கள். அல்லது சேர்க்கப்பட்டுவிடுவார்கள்.
மனிதத்தை மாற்றானாய் நினைப்பதல்ல பண்பு. மாற்றான் என்பவர்கள் மாறவே மாட்டார்கள் என்பதால் விளையும் கேட்டினை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?
இப்போதெல்லாம் சொல்லை விட படக்காட்சிகளே உலகச் சுழற்சி அலைக்கு உசுப்பிவிடுகின்றன. மனித மனங்களையும் செய்கைகளையும் கூரிட்டுக்காட்டுகின்றன. கூர் வாளிடமிருந்து தப்பிவிடலாம். அடையாளம் காட்டும் படங்களிலிருந்து தப்பவே முடியாது.
இதைத்தான் அந்நியர்களின் அட்டகாசப் படங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. இதில் அசிங்கப்டுதிவிட்டதாக அர்த்தமில்லை. சொல்லாமல் சுகாதாரம் தெரியவேண்டும். சொல்லித்தான் தெரிவிதில்லை.
குடியிருக்கும் வரை சுகாதாரம் பேணுவது குடியிருப்பாளரின் கடமை. இதில் அந்நியர்கள் தவறிழைக்கின்றனர். இதில் தவறினால் மடமை. இப்படிப் பட்டவர்கள் கொரோனாவைவிட மோசமாவர்கள். இவர்கள் அப்புறப்படுத்தப்படவேண்டும். இதற்கு அப்புறம் என்பது சாக்குப் போக்கு காரணமாக வேண்டாம். இவர்களைக்கட்டுக்குள் வைத்திருப்பது பராபரிப்பாளர்களின் கடமை. கட்டணம் என்பது கட்டாயமாகும் .கட்டாவிட்டால் கல்தா கொடுக்கலாம்.