சிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி

ஆயிஷா மொசபா என்ற பெண் எகிப்து நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். அந்த மருத்துவமனையில் முகமது பாமி என்பவர் கொரோனா நோய் தொற்றால் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அப்போது மருத்துவர் ஆயிஷா தான் அவருக்கு சிகிச்சை பார்த்துள்ளார். இதற்கிடையே அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து இரண்டு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்த முகமது பாமி மோதிரம் அணிந்து ஆயிஷாவிடம் காதலை வெளிப்படுத்தினார். இதற்கு சற்றும் மறுப்பு தெரிவிக்காமல் அவரது காதலை ஆயிஷாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த ஜோடிக்கு பலரும் தங்களது பாராட்டுதலைத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here