இந்தியாவில் ஜூன் 30 வரை நடமாட்ட கட்டுபாடு ஆணை நீடிப்பு!!

பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் இதுவரை நான்கு கட்ட ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளது. ஜூன் 30 தேதி வரை தடை செய்யப்பட்ட இடங்களில் பொதுமுடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அன் லாக் 1.0 என்ற பெயரில் பல புதிய அறிவிப்புக்களை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

அதில், நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நடமாட்ட கட்டுபாடு ஆணை ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புகளில் முதல் தளர்வாக ஜூன் 8ம் தேதி முதல் வழிபாட்டு தளங்கள் மற்றும் ஹோட்டல்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இரண்டாவது தளர்வாக பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதை பற்றி ஜூலை மாதத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தப்பட்டுள்ளது. மூன்றாவதாக மெட்ரோ ரயில், ஜிம், பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்று முடிவு செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட எப்போதும் போல் தடை தொடரும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here