ஆதிச்ச நல்லூரில் 3,000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 முதுமக்கள் தாழிகள் மற்றும் கை எலும்புகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25-ந் தேதி மாநில அரசு சார்பில் முதற்கட்டமாக அகழாய்வு பணி துவங்கியது. ஆதிச்சநல்லூரில் 4 குழிகள் அமைத்து அகழாய்வு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆதிச்சநல்லூரில் நேற்றைய தினம் அகழாய்வு பணியில் 3000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே 2 கை மூட்டு எலும்புகள் காணப்படுகின்றன.
ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here