கொரொனா பாட்டு அலுத்துவிட்டது

கொரோனா பாட்டு அலுத்துவிட்டதா? அப்படியும் சொல்வதற்கில்லை. அசதியாகிவிட்டது. இதுதான் உண்மை.

சுகாதாரத்துறையின் அதிரடி நடவடிக்கையால் கொரோனா பின் வாங்கிக்கொண்டிருக்கிறது. இப்படித்தான் ஆறுதல் கூறவேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்தும்போதே ஒளிந்து தாக்கும் டிங்கி, அதிகமாகிவருக்கிறது. வேறு தாக்குதல்களும் நடக்கும்.

நெகிரி மாநிலத்தில், கடந்த மே மாதம் 31 ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம்நாள் வரை 1,281 டிங்கி சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றனவாம். கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 1,096 பதிவுகள் அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றன.

டிங்கி சம்பவங்கள் கூடுகின்றன என்றால் மக்கள் அஜாக்கிரதையாக இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம் கொள்ல வேண்டும். அஜாக்கிரதையாக இருக்கிறார்கள் என்றால் ஏடிஸ் கொசுக்களை உருவாக்குகிறார்கள் என்பதாகத்தானே தெரிகிறது.

ஏடிஸ் கொசுக்களின் உற்பத்திக்கு மக்களே காரணமாக இருப்பதால், கொசுக்கள் மீது வீண்பழி போடமுடியாது. ஏடிஸ் கொசுக்கள் எப்படியெல்லாம் உற்பத்தியாகும் என்பது அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் அதை அழிக்காமல் வேடிக்கை பார்க்கும்படி யாரும் கட்டளையிடவில்லை.

இந்த மூன்று மாத இடைவெளி கோரோனாவுக்கானதாக இருந்தாலும் ஏடிஸ் கொசு ஒழிப்புக்கான வேலைகளைச் செய்யாமல் விட்டது யார் குற்றம்?

கொரோனா மீது செலுத்திய பார்வையை டிங்கிமீதும் செலுத்தியிருக்கம் வேண்டும். செய்யாமல் விட்டது மக்கள் தவறு. அதை உணர்த்தாமல் விட்டது மாவட்ட, ஊராட்சி மன்றங்களின் தவறு.

இதற்குக்காரணம் இருக்கிறது என்றால் அது, காதில் பூ சுற்றுவதாக இருக்கும். மக்களும் அலட்சியத்திற்குப்பேர் போனவர்களாகவே இருக்கிறார்கள். டிங்கி எண்ணிக்கை கணக்கல்ல, அழிவின் பாதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here