இத்தாலியில் 60 வயது மூதாட்டிக்கு தலையில் அறுவை சிகிச்சை நடந்த போது, தனக்கு பிடித்த உணவுகளை தயாரித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலானோருக்கு அறுவை சிகிச்சை என்ற வார்த்தையை கேட்டாலே பயம் தொற்றிக் கொள்ளும். கத்தியை பார்த்ததும் கிறுகிறுத்துப் போகிறவர்களே அதிகம். ஆனால் இத்தாலியை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு மூளைக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது, தனக்கு பிடித்த உணவை அவர் சமைத்துக் கொண்டு கூலாக இருந்துள்ளார்.
இத்தாலியில் வசிக்கும் 60 வயதான மூதாட்டி ஒருவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.