ஷாக் அடிக்குமா மின்சார பில்?

மின்சாரம். இது .சக்திவாய்ந்தது. அதனால் தான் கவனமாக இருக்க வேண்டும் என்கிறர்கள். இதைத் தவறாகப் பயன்படுத்தினால் இதனால் ஏற்படும் பாதிப்பு விபரீதமானது என்பதற்கு ஆதாரம் தேவையில்லை.

கடந்த மூன்று மாதங்களாக மக்கள் மின்சாரத்தை மிக அதிகமாகவே பயன்படுத்தியிருப்பார்கள் என்றால் யூகம் சரியாகத்தான் இருக்கும். நம்பித்தான் ஆகவேண்டும். மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளியில் வீட்டிலேயெ இருக்கவேண்டிய கட்டாயத்தில் மின்சாரப் பயனீடு தலைக்குமேல் போயிருக்கும்.

காற்றாடிகள் பல மணி நேரம் சுழன்றிருக்கும். குளிர் சாதனங்கள், தொலைக்காட்சி, மின்சாதனங்கள் அதிகமாகச் செயல் பட்டிருக்கும். இதில் தொழிற்சாலைகளுக்கு வேறு மாதிரி கணக்கிடப்படும்.

ஏப்ரல், மே, ஜூன் மாத பில்கள் இன்னும் விநியோகிக்கப்படாமல் இருப்பதால், மின் கட்டணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துமோ என்ற கவலையும் இருக்கும். மின் கட்டணம் நடுத்தர வர்க்கத்துக்குப் பெரும் சுமையாகவே இருக்கும். கட்டணம் செலுத்துவதில் பேரதிர்ச்சி காத்திருக்கிறது, அப்படி இருந்தால் என்ன செய்யப்போகிறது. இந்த மின் வாரியம்?

பில் கையில் கிடைத்ததும் நிச்சயமாக ஷாக்  அடிக்கும். ஆதலால் தவணை முறையில் செலுத்துவது இலகுவாக இருக்க வேண்டும். அதோடு கழிவுகள் நியாயமானதாக அமையவும் வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே பய்னீட்டாளர்களிடம் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here