கைவிடப்பட்ட முஃப்தி ரீமேக் திரைப்படம் மீண்டும் தொடக்கம்

சிம்பு கன்னட படமான முஃப்தி ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமானார். ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு – கவுதம் கார்த்திக் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

கர்நாடகாவில் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், சிம்பு – ஞானவேல் ராஜா இடையேயான மனஸ்தாபத்தால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது முஃப்தி பட ரீமேக்கை மீண்டும் துவங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் சிம்பு – ஞானவேல் ராஜா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு முடிந்து நிலைமை சீரான பிறகு படப்பிடிப்பு துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here