மனித கடத்தல் சிண்டிகேட்டுகளுடன் போலீஸ் மற்றும் ஆயுதப்படையினருக்கு தொடர்பு – ஐஜிபி

அண்மையில் ஜோகூரில் 18 அமலாக்கப் படையினர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிண்டிகேட்டுகளின் “ஊதியத்தில்” இருப்பவர்கள் மீது  நடவடிக்கை எடுப்பதற்காக அவர்கள்  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்படைத் தலைவர் தெரிவித்தார். சிண்டிகேட்டுகளுடன் தொடர்புடைய போலீஸ் மற்றும் ஆயுதப்படை வீரர்களை கைது செய்வதில் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். ” இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் மற்றும் ஆயுதப்படைத் தலைவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்று அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறினார்.

அடையாளம் காணப்பட்டவர்கள் சிண்டிகேட் உடன்  கூட்டு சேர்ந்திருந்தனர், மேலும் அவர்கள் செய்த குற்றங்களை மறைக்க  பணம் செலுத்துவார்கள் என்றும் அவர் கூறினார். இவர்கள் விவரம் தெரியாதவர்களோ அல்லது தியாகிகளோ அல்லர். உண்மையில் சிண்டிகேட்டுகளுடன் ஆழமான உறவினை வைத்திருப்பவர்கள் என்றார். அடையாளம் காணப்பட்ட அமலாக்கப் பணியாளர்கள் மாதாந்திர டோக்கன்களுக்கு ஈடாக கடத்தல்காரர்களுக்கு பாதுகாப்பான வழியை காட்டியிருப்பதாக நம்பப்படுகிறது. சிண்டிகேட் தொடர்பாக 13 போலீஸ் பணியாளர்கள் மற்றும் ஐந்து ஆயுதப்படை வீரர்களை வீழ்த்துவதில் ஜோகூர் போலீசாரின்  நடவடிக்கைகளை அவர் பாராட்டினார்.

எங்கள் நடவடிக்கைகள் பெரிய அளவில் தொடரும்.  மேலும் சிண்டிகேட்டுகளுடன் தொடர்புடைய அமலாக்கப் பணியாளர்கள் தப்பிக்க முடியாது  என்று அவர் கூறினார். ஜூன் 15 முதல் ஜூன் 18 வரை நடத்தப்பட்ட நடவடிக்கையில் 18 அமலாக்கப் பணியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அண்மையில் ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை, ஜோகூரின் கிழக்கு கடற்கரையைப் பயன்படுத்தி சிண்டிகேட்டுகள் தங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாகக் கூறினார். சம்பந்தப்பட்ட பணியாளர்களில் ஒருவருக்கு  வெற்றிகரமான கடத்தல் நடைபெற்றால் RM10,000 ரொக்கமாக பணம் பெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஆயுதப்படைத் தலைவர்  டான் ஸ்ரீ அஃப்ஃபெண்டி புவாங், இராணுவத்தில் எந்தவொரு நபரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் இராணுவம் சமரசம் செய்யாது என்றார். இந்த விஷயத்தில் நாங்கள் உறுதியாகவும் கடுமையாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் இதுபோன்ற குற்றவாளிகளின் நடவடிக்கைகள் இராணுவத்தின் நன்மதிப்பு பாதிக்கப்படும் என்றார். சிண்டிகேட்டுகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்கள் மீது அடுத்த நடவடிக்கை எடுக்க நாங்கள் அதை அதிகாரிகளிடம் விட்டு விடுகிறோம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here