இங்குள்ள சொகுசு அடுக்கம் ஒன்றில் இணையத்தின் மூலம் மோசடிகளை புரிந்து வந்த சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
கோவிட் காரணத்தால் நாட்டில் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை அமல் படுத்தப்பட்டது. அதற்கு முன்பு இக்கும்பல் இணைய பங்கு மற்றும் ஃபோரெக்ஸ் ஆகியவற்றின் மூலம் பண மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது. அதோடு அதன் மூலம் கிட்டத்தட்ட 2 லட்சம் வெள்ளி சம்பாதித்துள்ளது என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறை தலைவர் ஏசிபி நிக் எஸானி முகமட் பைசல் கூறினார்.
சீனா மற்றும் பிலிப்பைன்ஸை சேர்ந்த பெண்கள் உட்பட 12 பேர் அவ்வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். முகநூலில் வீடியோ பதிவுகளை போட்டு அதன் வழி வாடிக்கையாளர்களை கவர்ந்து மோசடிகளை செய்து வந்துள்ளனர்.
சுற்றுலா விசா மூலம் நாட்டிற்குள் நுழைந்த இவர்கள் இங்கேயே தலைமையகத்தை அமைத்து செயல்பட்டு வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் டாமான்சாரா காவல் நிலையத்திற்கு மேல் விசாரணைக்காக கொன்டுச் செல்லப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.