பல தாமான்களில் ஒரு சில காலி வீடுகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன என்பதும் அதனால் ஏற்படும் விவகாரங்களும் அதிகம் என்பது இன்றை நேற்றை பிரச்சினையல்ல.
வீடுகள் வாங்கிய பலர் காலிசெய்துவிட்டு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டதால் அந்த இடம் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. காலி செய்தது ஒருபொருட்டல்ல. ஆனால் கவனிப்பாரற்றுக் கிடப்பதால் காடு மண்டி அண்டை வீட்டுக்காரர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. என்பதே பிரச்சினை.
இதற்கான வழி அவ்வீடுகள பறிமுதல் செய்வதே, அல்லது வீட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது. மேலும் அவ்வீட்டின் உரிமையாளரிடம் பராமரிப்புச் செலவைப் பெறுவது.
வீட்டின் உரிமையாளர் அடையாளம் காணப்படாவிட்டால் என்ன செய்வது என்றும் கவலைப்படத்தேவையில்லை.
வீட்டின் வெளியில் அவகாச நோட்டீஸ் ஒன்றை பார்வைக்கு ஒட்டவைத்துவிட்டு. அவகாசம் முடிந்தபின் அவ்வீட்டை ஊராட்சி மன்றமே சீர் செய்து வாடகைக்கு விடலாம்.
இவற்றைவிட சிறந்த வழிகளும் இருக்கலாம். அண்டை வீட்டார் அச்சுறுத்தலில் இருந்து விரைவில் மீளவேண்டும் என்பதுதான்.