கடல்சார் துறைக்கு நவீன ஆயுதங்கள்?

சட்டவிரோதமாக குடியேறியவர்களின் கடத்தல், எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பதற்காக தேசிய பணிக்குழு (என்.டி.எஃப்) கடல்சார்  ஆயுதங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

அதன் தளபதி, டத்தோ அரிஸ்டான் அப்துல்லா கூறுகையில், என்.டி.எஃப் தற்போது ஓப்ஸ் பெந்தெங் என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட நடவடிக்கைகளுக்கு தற்போது கிடைக்கும் ஆயுதங்களையே பயன்படுத்துகிறது.

ஓப்ஸ் பெந்தெங் ஓர் ஒருங்கிணைந்த நடவடிக்கை என்பதால், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பணியை அடைய ஆயுதங்களின் இயக்கம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

எனவே, என்.டி.எஃப் தற்போது புதிய ஆயுதங்களை கடல்சார் காவலுக்குச் சேர்க்க திட்டமிட்டுள்ளது. இவற்றில் இடைமறிப்புப்  படகுகளும் உள்ளன.

சட்டவிரோதமாக நுழைகின்றவர்களை எல்லைநீரில் தடுத்து நிறுத்துவதற்கு இந்த படகுகள் தேவை என்று அவர் இங்குள்ள என்.டி.எஃப் தலைமையகத்தில் சிறப்பு பேட்டியில் கூறினார்.

ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யுஏவி) போன்ற விமானத் திறனை அதிகரிக்கவும் என்.டி.எஃப் திட்டமிட்டுள்ளது என்று அரிஸ் கூறினார்.

விரிவாக, விரைவான துல்லியமான தகவல்களை வழங்குவதோடு, நிகழ்நேர கண்காணிப்பை நடத்துவதற்கு இந்த ஆயுதங்கள் முக்கியம் என்றார் அவர்.

இந்த நேரத்தில், அரசாங்கம் என்.டி.எஃப்-க்கு ஒரு சிறப்பு ஒதுக்கீட்டை ஏற்படுத்தி வருகிறது.

அரச மலேசியா போலிஸ், மலேசிய ஆயுதப்படைகள், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் அனைத்து நில, கடல் அமலாக்க முகவர் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் காவல் கண்காணிப்பு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here