இந்தோனேசியர்கள் என் நம்பப்படும் 10 பேர் அதிகாலை இங்குள்ள ஜலான் பைபாஸ் போர்ட்டிக்சனில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்றதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்று போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூபிரண்டெண்ட்ணட் எடி ஷாம் முகமது தெரிவித்தார்.
அதிகாலை 1 மணிக்குத் தொடங்கியது இப்பந்தயம். சுமார் நான்கு மணி நேர சோதனையில், சாம்செங் ஜாலானானில் 17 முதல் 24 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.
மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்தை உயர்த்துவது, சிவப்பு விளக்கை மீறுவது கம்போங் அராப், கம்போங் பாயா போக்குவரத்து விளக்கு சந்திப்புகளில் யு-திருப்பம் செய்வது போன்ற குற்றங்களையும் அவர்கள் செய்ததாக அவர் கூறினார்.
பிடிபட்ட அவர்கள் தனது நண்பர்களுடன் நண்பர்களைச் சந்திக்க போர்ட்டிக்சனுக்கு வந்திருந்தனர். ஆனால், சட்டவிரோத பந்தயத்தில் சேர முடிவு செய்தனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார் .
கைது செய்யப்பட்டவர்களில் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் இருக்கின்றனர்.
அவர்கள் சிரம்பான் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்றார் அவர்.