கோத்தா டாமான்சாரா மஹோகானி வட்டாரத்தில் சாலை ரெளடிகளுக்கு (மாட் ரெம்பி) எதிராக போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனை 29 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையில் நடத்தப்பட்ட சாலை தடுப்பு சோதனையில் மொத்தம் 32 மோட்டார் சைக்கிளோட்டிகள் விசாரிக்கப்பட்டனர். அதில் 29 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 23 மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு பல்வேறு சாலை குற்றங்களுக்காக சம்மன்கள் வழங்கப்பட்டதாக மாவட்ட ஓசிபிடி நிக் எஸானி முகமட் பைசல் கூறினார்.
அதோடு சாலை பிற வாகனமோட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மோசமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிய அறுவர் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உட்பட கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக கோத்தா டாமான்சாரா காவல் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.