கல்வி ஆண்டு விடுமுறை கலங்கவைக்கிறதா?

கோப்புப் படம்

கோவிட் -19 என்பது உலகப் பிரச்சினை. அதை யாரும் விரும்பவில்லை. ஆனாலும் வந்தது, மக்களின் பாதுகாப்புக்கு பெரும் மிரட்டலாகவே இருந்தது. இதில் தொழில்துறைகள் பெரிதும் சரிந்தன. பொருளாதாரத் தாக்கம் ஏற்பட்டது.

பணவீக்கத்தால் மக்கள் பாதிப்படைந்தனர். மொத்தத்தில் முடக்கப்பட்டனர் என்பதுதான் சரியான வார்த்தை.

முக்கியமாக அசிரியர்களின் நிலை திண்டாட்டமானது. அவர்கள் விரும்பினாலும் கடமைசெய்ய முடியாமல் தடுக்கப்பட்டனர். நோய்த்தொற்றின் காரணத்தால் சுகாதாரத்துறையின் ஆலோசனைக்கு அனைவரும் கட்டுப்பட்டனர்.

இதில் ஆசிரியர்களின் தவறு ஏதும் இல்லை. அவர்களும் மாணவர்களின் நிலைமை கருதியே கட்டுப்பட்டனர். அவர்களாக ஓய்வு எடுத்துகொள்ளவில்லை. இதிலிருந்தே அரசாங்கமே இதற்கான தார்மீகப்பொறுப்பை ஏற்கவேண்டும்.

ஆனால், கல்வி ஆண்டின் காலண்டரில் குறிப்பிட்ட படி விடுமுறைக் ககுறைப்பு என்பதில் ஆசிரியர்களிடமிருந்து அதிருப்தி எழுந்திருக்கிறது.

கல்வி ஆண்டு விடுமுறையை அனுசரித்தே பலர் பயணங்களைத்தேர்வு செய்திருக்கின்றனர். பயணங்களுக்கான முன்பதிவுகளையும் செய்திருக்கின்றனர். அதனை மாற்றுவதால் இந்த ஆண்டிற்குப் பயணங்கள் தடையாக அமைந்துவிடும்.

ஹஜ்ஜுப்பயணத்திற்கும் பலர் தயாராகிவிட்டனர். புதிய விடுமுறை காலண்டர் இதற்கு சரியாக அமையாது என்றே பிகப்பெரும்பான்மை ஆசிரியர்கள் விரும்புகின்றனர்.

ஆசிரியர்கள் பயணங்களைத்தேர்வு செய்வது அவர்களின் மன இறுக்கத்திற்கு மருந்தாகவும் இருக்கும் என்பதையும் கவனித்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். பழைய விடுமுறைகளைக் கையாள்வதே தேவை என்று மெளனக்கொடி உயர்த்தியிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here