பணிகளுக்கு நடுவே கல்வி – சாத்தியம் ஆக்கிய (OUM) பல்கலைக்கழகம்

கல்வி, அரசியல், கலை, விளையாட்டு என அனைத்து அம்ங்ங்களிலும் பல பெண்கள் சிறந்து விளங்குவதை நம் அன்றாட வாழ்வில் காண்கின்றோம்.
நம் நாட்டிலும் பல பெண்கள் பலதரப்பட்ட துறைகளில் தங்களுக்கே உரிய பாணியில் கொடிநாட்டி வருகின்றனர்.

அதேபோல் மலேசியக் கலைத் துறையிலும் தனக்கென ஒரு பாணியைக் கொண்டு பன்முகத் திறமையை வெளிக் கொணர்ந்து பலரின் பாராட்டுகளைப் பெற்ற ரத்னா கௌரி ராமனும் கல்வியிலும் சிறந்து விளங்குகின்றார்.

காளி முனி தரிசனம் என்ற திரைப் படத்தின் மூலம் பலரின் பாராட்டைப் பெற்ற இவர், பல தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார். இது தவிர விக்ராந்த் எனும் உள்ளூர் திரைப் படத்தில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

இது தவிர தனது பெயரில் யூ-டியூப் அலைவரிசை ஒன்றைத் தொடங்கி அதில் பலதரப்பட்ட காணொளிகளையும் பதிவிட்டு வருகின்றார். இப்படி பல வேலைகளுக்கிடையே ரத்னா கௌரி, பல்லூடகத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

பலரின் வாழ்க்கைப் பாதையை உருமாற்றி முன்னேற்ற வழியில் அழைத்துச் ஙெ்ன்ற ஓயூஎம் (OUM) பல்லைக்கழகம்தான் இவரின் வாழ்விலும் பெரும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது அனுபவங்களை மக்கள் ஓசையிடம் பகிர்ந்து கொள்கிறார்.

கே: உங்களைப் பற்றிக் கூறுங்களேன்?

ப: என் பெயர் ரத்னா கௌரி ராமன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சிலாங்கூர்- கோலாலம்பூரில் தான். எனக்கு இரு சகோதரர்கள் உள்ளனர்.

கே: உங்களுக்கு கலைத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

ப: என் அப்பா, அம்மா இருவரும் ஏற்கெனவே கலைத்துறையில் இருந்தவர்கள்தான். அம்மா ஒரு பாடகி. அவர்களிடமிருந்துதான் எனக்கு அந்த ஆர்வம் ஏற்பட்டது.

கே: கலைத்துறை எப்படித் தொடங்கியது?

ப: இடைநிலைக் கல்வியை முடித்ததும் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி கலைத் துறையில் முழுமையாக ஈடுபட்டேன். இதனால் மேற்கல்வி கூட தொடர முடியாமல் போனது.

கே: பிறகு OUM பல்கலைக்கழக அறிமுகம் எப்படி ஏற்பட்டது?

ப: கலைத்துறையில் முழுமையாக ஈடுபட்டிருந்தாலும் மேற்கல்வியைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தொடர்ந்து இருந்தது. அச்ங்மயம் என் நண்பர் ஒருவர் OUM பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக உயர்கல்வி பயின்று கொண்டிருந்தார். அவரின் மூலம் இப்பல்கலைக்கழகத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.

கே:உடனடியாக OUM பல்கலைக்கழகத்தில் இணைந்துவிட்டீர்களா?

ப: இல்லை. முதலில் நான் கலைத் துறையில் இருப்பதால் அது சார்ந்த கல்வியைப் பயில வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். வேலை செய்து கொண்டிருந்ததால் பகுதி நேரமாக பயில முடியும் என்பதையும் புரிந்து கொண்டேன்.
இதனை அடுத்து அந்தப் பல்கலைக்கழகத்திற்குச் ஙெ்ன்று பாடத் திட்டங்களையும் நேர ஒதுக்கீட்டையும் குறித்து விசாரித்தேன்.

பிறகு இதர சில பல்கலைக் கழகங்களுக்குச் ஙெ்ன்று அங்கும் விசாரித்தேன். இறுதியாக அனைத்தையும் ஒப்பிட்டு, அதில் சிறந்த தேர்வு OUM பல்கலைக்கழகம்தான் என்று முடிவெடுத்தேன்.

இருந்தாலும் அப்பல்கலைக்கழகத்தில் பல்லூடகத் துறையில் இளங்கலை கல்வி பயில எஸ்.பி.எம். தேர்வு மட்டும் போதாது. அதனால் அப்பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பிரத்தியேக நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இளங்கலை பயில வாய்ப்பு வழங்கப்படும். நானும் அதைக் கடந்துதான் வந்தேன்.

கே: OUM பல்கலைக்கழகத்தைப் பற்றிக் கூறுங்கள்?

ப: நான் 2009ஆம் ஆண்டு அப்பல்கலைக்கழகத்தில் இணைந்து 2013ஆம் ஆண்டு பட்டம் பெற்றேன். பொதுவாக அங்கு வார இறுதியில் மாற்று ரீதியில் வகுப்புகள் நடத்தப்படும். இது வேலை ஙெ்ய்து கொண்டிருக்கும் எனக்கு மிக இலகுவாக இருந்தது.
மேலும், மாணவர்களுக்கு அங்கு பிரத்தியேக பாடத் தளம் (இணையம்) வழங்கப்படும். அதில் பாடக் குறிப்புகள் வழங்கப்படும். பாட ங்ம்பந்தமாக எங்களுக்கு எழும் ங்ந்தேகங்களை நாங்கள் அங்கு கேள்வி எழுப்பினால் விரிவுரையாளர்களிடமிருந்து உடனடியாக பதில் கிடைக்கும். தொடர்ந்து விரிவுரையாளர்களும் மிகவும் அன்பாக நடந்து கொள்வர். நேரம் காலம் பாராமல் எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பர்.
இது தவிர, பாடத் திட்டத்திற்கான கட்டணமும் நியாயமாக இருந்தது.

கே: நீங்கள் பயின்ற பாடத் திட்டம் பற்றிக் கூறுங்கள்?

ப: நான் OUM பல்கலைக்கழகத்தில் மல்டி மீடியா எனப்படும் பல்லூடகத் துறையில் இளங்கலை பயின்றேன்.
இது நான் ஏற்கெனவே கால் பதித்திருக்கும் கலைத் துறைக்கு மிகவும் நெருக்கமானது. இந்தப் பாடத்திட்டத்தின் வாயிலாக ஆடியோ- வீடியோ தொகுப்பு, திரைக்கதை உருவாக்குதல், கதை விவாதம் என பல அம்ங்ங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது.

கே: OUM பல்கலைக்கழகத்தில் பயின்ற கல்வி உங்களுக்கு இப்போது எப்படி உதவுகின்றது?

ப: இந்தப் பல்லூடகத் துறையில் பல அம்ங்ங்களைக் கற்றுக் கொண்டதால் பின்னர் கலைத்துறையில் என்னால் தொழில் நுட்பம் ங்ார்ந்த விஷயங்களைத் தெளிவாக உணர்ந்து செயல்பட முடிந்தது.

இன்னும் சோல்லப் போனால், நான் தற்போது ரத்னா கௌரி எனும் என் பெயரில் யூ-டியூப் அலைவரிசை ஒன்றைத் தொடங்கியுள் ளேன். நடமாட்டக் கட்டுப் பாட்டு ஆணை காலகட்டத்தில் நான் அந்த அலைவரிசையில் பல சமையல் குறிப்பு காணொளிகளைப் பதிவிட்டுள்ளேன்.
அந்தக் காணொளிகள் அனைத்தையும் நானே தொகுத்துள்ளேன்.
இந்த முன்னேற்றத்திற்கு OUM பல்கலைக்கழகத்திற்குத்தான்
நன்றி சோல்ல
வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here