புளு பிரதர்ஸ் இயக்கம்மோட்டார் சைக்கிளுக்கான டுப்ளிகேன் எண்ணெய்யைத் தயாரித்துள்ளது.
ஓர் இந்திய இயக்கம் இந்த மோட்டார் சைக்கிளுக்கான 4 டி எண்ணெய்யை அரசாங்கத்தின் அனுமதி பெற்று தயாரித்திருப்பதாக அதன் தலைவர் டாக்டர் ராஜேஸ்வரன் தெரிவித்தார். இந்திய இளைஞர்கள் இந்த எண்ணெய்யைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த எண்ணெய்த் தயாரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று வேகா பைக்கர்ஸ் உறுப்பினர்கள் 30க்கும் மேற்பட்டவர்களிடம் 100 எண்ணெய் போத்தல்களை டத்தோ பத்நாபன் வழங்கினார். இந்திய இளைஞர்கள் நம் சமுதாயத்தினர் தயாரித்து விநியோகம் ஙெ்ய்யும் இந்த மோட்டார் சைக்கிள் எண்ணெய்யைப் பயன்படுத்த வேண்டும் என்று டத்தோ பத்நாதன் கேட்டுக் கொண்டார்.
இந்திய இளைஞர்கள் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொருவரும் இந்த எண்ணெய்யை மோட்டார் சைக்கிளுக்குப்
பயன்படுத்தினால் நம் இந்தியர்களின் வியாபாரமும் நல்ல நிலைக்கு வருமென்று அவர் தெரிவித்தார்.
ஒவ்வோரு இந்திய இளைஞரும் இந்த மோட்டார் சைக்கிள் எண்ணெய்க்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.