பெக்கான் கோலா சினியில் உள்ள கம்போங் புக்கிட் செம்படாக் பிந்தாங்கில் பாதுகாப்பு அமைச்சகம் 60 மில்லியன் செலவில் ஆயுத மேம்பாட்டு மையத்தை உருவாக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
வெப்பமண்டல சோதனை மைய திட்டத்தின் கட்டுமானத்திற்கு பாரிசன் நேஷனல் நிர்வாகத்தின் போது பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இது வரும் சினி இடைத்தேர்தலுடன் தொடர்புடையதல்ல என்றும் அவர் கூறினார்.
இந்த திட்டம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, கட்டுமான செலவுக்கு 40 மில்லியனும் உபகரணங்களுக்கு 20 மில்லியனும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மலேசிய ஆயுதப்படை வீரர்களுடன் ஒரு நல்லெண்ண நிகழ்ச்சிக்குப் பின்னர் டெண்டர் வழங்கும் பணியின்போது அவர் பேசினார்.
பெக்கான் நாடாளுமன்ற உறுப்ப்பினர் டத்தோஶ்ரீ நஜிப் அப்துல் ரசாக், மூத்த விவகாரத் துறை (ஜே.எச்.இ.வி) இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் டத்தோ ஸுல்கர்னைன் அகமது, சினி இடைத்தேர்தலுக்கான பாரிசன் நேஷனல் (பி.என்) வேட்பாளர் முஹமட் ஷரீம் எம்.டி ஜெய்ன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கருத்து தெரிவித்த இஸ்மாயில் சப்ரி, ஆயுத சிறப்புமிக்க மையத்தை வாங்குவதன் நோக்கம் பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்ட வாகனங்கள், இராணுவ உபகரணங்களுக்கான உள்ளூர் சோதனைகள், ஆயுத சோதனைகளை மேற்கொள்வற்காகும் என்றார்.
இது அங்கீகரிக்கப்பட்டது இடைத்தேர்தல் காரணமாக அல்ல. நான் வெறுமனே திட்டத்தின் நிலையை அறிவிக்கிறேன். இங்குள்ள மக்கள் இந்தத் திட்டத்தைப் பற்றி அறிந்திருக்கிறார்கள், இந்த விவகாரம் முன்னர் அறிவிக்கப்பட்டததாகும் என்றும் அவர் கூறினார்.