துணைப்பிரதமர் பதவிக்கு முக்ரீஸ் பெயரை நான் பரிந்துரைக்கவில்லை – டாக்டர் எம்

பெட்டாலிங் ஜெயா: துணை பிரதமர் (II) பதவிக்கான வேட்பாளராக டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீரை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை நான் முன்வைக்கவில்லை என்று துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் தனது மகனுக்கான நியமனத்தை ஏற்கனவே அமனா தலைவர் முகமட் பின் சாபு மற்றும் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருடன் ஜூன் 22 அன்று கூறிவிட்டதாக  ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதற்காக தான் விமர்சிக்கப்படுவேன்  என்று தனக்குத் தெரியும் என்று டாக்டர் மகாதீர் மேலும் கூறினார்.

நான் ஒரு முரண்பட்ட நிலையில் இருந்தேன். நான் முதன்முதலில் பிரதமராக இருந்தபோது, ​​எனது மகனை அரசியலில் குறிப்பாக ஆளும் கட்சியின் உறுப்பினராக பங்கேற்க முதலில் தடை செய்தேன். எனது குடும்பத்திற்கு நான்  சலுகைகளை வழங்கினேன் என்று குற்றம் சாட்டப்படுவதை விரும்பவில்லை   என்று திங்களன்று (ஜூன் 29) தனது சமூக வலைப்பதிவில் தெரிவித்திருந்தார்.

இப்போது நான் பிரதமராக இல்லாதபோது, ​​தனது பெயரைக் காக்கும் பொறுப்பை இனி தனது பிள்ளைகள் சுமக்க வேண்டியதில்லை என்று அவர் கூறினார். தற்போது  அரசியலில் சுதந்திரமாக  ஈடுபட முடியும். ஆனால்  அவர்கள் வெற்றியாளர்களாக  இருப்பார்களா  இல்லையா என்பது அவர்களை சார்ந்தது. சில பதவிகளுக்கு முக்ரிஸின் பெயர் முன்மொழியப்பட்டபோது ​​எனது சுய நலனுக்காக  எதிர்க்க எனக்கு உரிமை இல்லை என்று அவர் கூறினார். அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் பிளஸ் வெற்றி பெற வேண்டுமென்றால், பி.கே.ஆர் தலைவர் டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம், முக்ரிஸுடன் துணைப் பிரதமராக இருக்க வேண்டும் என்று சனிக்கிழமை (ஜூன் 27) டாக்டர் மகாதீர் முன்மொழிந்தார்.

சபாவின் முதலமைச்சரான பார்ட்டி வாரிசன் நெகாரா தலைவர் டத்தோஶ்ரீ  முகமட் ஷாஃபி அப்டாலை எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார். இந்த திட்டத்தை அரசியல் பிளவின் இரு தரப்பு அரசியல்வாதிகளும் இழிந்த முறையில் சந்தித்தனர். சிலர் டாக்டர் மகாதீரின் இறுதி நோக்கம் தனது மகனுக்கு பிரதமராக வருவதற்கான வாய்ப்பை உறுதி செய்வதாகும் என்று கூறினர். எனது விளக்கம் நம்பப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அது ஒவ்வொரு தனிப்பட்டவரின் கருத்தை பொறுத்தது. நிச்சயமாக என்னுடன் எதிரிகளாக இருப்பவர்கள் என்னை இழிவாக தான் பார்ப்பார்கள். இது மனித இயல்பு என்பதால் இதை ஏற்றுக்கொள்கிறேன்  என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here