கட்டுப்பாட்டு ஆணை கால அபராதத்தைக் கட்டத் தவறுவோருக்கு எதிராக கைது ஆணை

-திருத்தப்பட்ட செய்தி

  • கடந்த ஜூலை 2ஆம் தேதி மக்கள் ஓசை நாளிதழில் வெளிவந்த இச்செய்தியில் எஸ்ஓபியை மீறுபவர்களுக்கு 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என்பதற்கு பதிலாக 1,00 வெள்ளி என தொழில்நுட்ப கோளாறு காரணமாக அச்சடிக்கப்பட்டுள்ளது.
  • மக்கள் ஓசையின் வாசக பெருமக்களே இதன் மூலம் சரியான (திருத்தப்பட்ட செய்தியை) வழங்கியிருக்கிறோம்.

பாகான் செராய்,

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில், எஸ்ஓபியை மீறியவர்களுக்கு விதிக்கப்பட்ட 1,000 வெள்ளி அபராத தொகையை இன்னும் செலுத்தாதவர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்படலாம் என்று கிரியான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஒமார் பக்தியார் பின் யாக்கோப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த 08.04.2020ஆம் தேதி முதல் நடப்பில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீறலுக்கு எதிராக அபராதம் விதிப்பு விதியின் கீழ் கடந்த 09.06.2020 ஆம் தேதி வரை மொத்தம் 103 பேருக்கு கிரியான் மாவட்ட காவல்துறை அபராதம் விதித்ததாக அவர் சொன்னார்.

அவர்களில் இது வரை 39 பேர் மட்டுமே அருகிலுள்ள சுகாதார இலாக்களில் தங்களின் அபராதத் தொகையைச் செலுத்தியுள்ளனர். அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 14 நாட்களுக்கான காலக்கெடு முடிந்துவிட்டதால் மேலும் காலம் கடத்தாமல் அவர்கள் தங்களின் அபராதத்தைச் செலுத்தி விடுவது நல்லது. தவறினால் அவர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்படலாம் என்று ஒமார் பக்தியார் தெரிவித்தார்.

மேற்கண்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் விதிமுறைகளை மீறுவோருக்கு ஆயிரம் வெள்ளிக்கு மேற்போகாத அபராதம் அல்லது ஆறு மாதத்திற்கு மேற்போகாத சிறை தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here