போலியான செய்தி – நபர் தேடப்படுகிறார்!

இங்குள்ள பாகான் டாலாம் மசூதியின் பல  உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கோவிட் -19 நோய்த்தொற்றின் வாட்ஸ்அப் குரல் செய்தியில் கூறப்பட்ட கூற்றை போலீசார் அலசினர்.  இச்செய்தி வைரலாகியிருக்கிறது. இது போலி செய்தி எனவௌம் தெரியவந்திருக்கிறது.

செபராங் பிறை உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி நூர்செய்னி முகமட் நூர் கூறுகையில், ஆரம்ப விசாரணையில் அப்பகுதியில் உள்ள சமூக உறுப்பினர்களை கோபப்படுத்திய  அச்செய்தி போலியானது என்று பின்னர் தெரியவந்தாக கூறினார்.

பாகான் டாலாம் மசூதியின் தலைவரை காவல்துறை சந்தித்தது, அந்த  செய்தியில் உண்மை இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.  உண்மையில், சுகாதார அமைச்சகத்துடன் பகிர்ந்துகொண்டபோது  அச்செய்தியில் உள்ள தகவல்கள் தவறானவை என்பது கண்டறியப்பட்டது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அச்செய்தியை பரப்பிய நபரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நூர் சைனி கூறினார்.

சரிபார்க்கப்படாத செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here