தாய்லாந்திலிருந்து ஆடுகள் கடத்தல்

தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் கடத்தி வரப்பட்ட 139 ஆடுகள் பகாங் மாநில சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த குடிநுழைவு அமலாக்க அதிகாரிகள் பாக்கோங் ரோலாவில் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றின்போது ஆடுகளை பறிமுதல்  செய்தனர்.

ஆற்று வழியாக எல்லையைக் கடந்து மலேசியா வந்த படகில் இருந்த ஆறு ஆடவர்கள் இச்சம்பவத்தின்போது ஆற்றைக் கடந்து தப்பியோடினர்.

1 லட்சத்து 66 ஆயிரத்து 800 வெள்ளி மதிப்புள்ள ஆடுகள் அறுப்புக்காக ஆற்றைக் கடந்து கொண்டு வரப்பட்ட நிலையில் சோதனை நடத்தப்பட்டது.

அதிகாரிகள் வருவதை உணர்ந்து கொண்ட ஆடவர் அனைவரும் ஆடுகளை இக்கரையில் விட்டுவிட்டு படகில் ஏறி கோலோக் ஆற்றைக் கடந்து தாய்லாந்து எல்லைக்குள் நுழைந்து தப்பிச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here