திறந்த வெளி சினிமா புதிய முயற்சியில் இணையும்!

கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட இயக்கம் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) பல வணிகத் துறைகளையும் சமூக நடவடிக்கைகளையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது.

இருப்பினும், இப்பாதிப்பு புதிய பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது . புதிய வாழ்க்கை முறைக்கு மக்கள் மாற்றியமைக்கப்படிருப்பதால்  அறிமுகப்படுத்தப்பட்ட புதுமுயற்சிகளும் தோன்றியிருக்கின்றன.

திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்க்கப் பழகிய மலேசியர்கள், மேலை நாடுகளைப்போல் திறந்தவெளியில் காரில் அமர்ந்தபடியே சினிமாக்களை பார்க்கத்தொடங்கியிருக்கின்றனர்.

இது மலேசியாவிற்கு நடைமுறை யதார்த்தமாக மாரியிருக்கிறது. இது கோவிட் -19 இன் பரவலைத் தடுப்பதற்கான ஒரு சிறந்த வழியாகவும் டிரைவ் – இன் சினிமாக்களைத் தேர்வுசெய்வதாகவும் ஆக்கியிருக்கிறது.  நமது அண்டை நாடான தாய்லாந்து உள்ளிட்ட பிற நாடுகளைப் போல் மலேசியர்களும் இதை பின்பற்றலாம்.

இருப்பினும், மூத்த அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஓர் ஊடக அறிக்கையில் கூறியது போல், இது நிர்ணயிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைக்கு உட்பட்டது, இது,  சினிமா ரசிகர்கள்  தங்கள் சொந்த வாகனங்களில் அமர்ந்தவாறே காட்சிகளை ரசிப்பதோடு தேவையான  உணவு வகைகளை  ஆன்லைனில் வரவழைத்துக்கொள்ளலாம்.

இதற்காக, தகவல் தொடர்பு , பன்முனைத்தகவல் மலேசியா அமைச்சகம், வீட்டுவசதி ,  உள்ளாட்சி அமைச்சகத்துடன் இணைந்து புதிய நடமுறை சாத்தியமான எஸ் ஓ பி யை உருவாக்கக்கூடும்.

கோவிட் -19 தொற்றுநோய் இன்னும் கவலைக்கு ஒரு காரணமாகவே இருப்பதால் உள் அரங்கில் திரைப்படங்களைப் பார்ப்பது பற்றிக்  கவலைப்படுபவர்களுக்கு இது  நல்ல தீர்வாக இருக்கும்!

இருப்பினும், இப்போதைய  கேள்வி என்னவென்றால், நாட்டில் வானிலை, இயங்கும் கார் இயந்திரங்களின் ஒலி, சில மலேசிய ஓட்டுநர்களின் மனநிறைவான அணுகுமுறையை கருத்தில் கொண்டு டிரைவ்-இன் சினிமாக்கள் பொருத்தமானவையாக இருக்குமா என்பதுதான். சினிமா நிர்வாகம் இதையும்  கவனிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஜூலை 1 முதல் சினிமாக்கள், தியேட்டர்கள், நேரடி நிகழ்வு அரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன, ஆனால், அனைத்து நடவடிக்கைகளும் இயக்கம் கட்டுப்பாட்டிற்குள்குள் உள் அரங்கில் நடத்தப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கமெண்ட்ஸ்   1)  விரிவான, திறந்த வெளி சினிமாக்கள் சிறந்தவையாக இருப்பதை வரவேற்கும் வேளை வழிப்பறி நடப்பதற்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. அதேவேளை திறந்தவெளி அரங்கம், அதற்கான இடம், பாதுகாப்பு என்றெல்லாம் இருக்கிறது.

 கமெண்ட்   2) இயந்திரங்கள் இயங்கிக்கொண்டிருப்பதைத் தவிர்க்கமுடியாது, அதிலிருந்து வெளியாகும் புகை நிச்சயம் சுகாதாரக்கேட்டை விளைவிக்கும். கார்களைத்திறந்து வைப்பவர்களுக்கு இது இடையூறாகவும் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here