மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்

மதுச்சாரப்பிரியர்களின் போதைக்குபின் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல்,  பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சாலை போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான திட்டம் குறித்து மலேசிய உணவு, பான நிவாகைகள் சங்கத் தலைவர் முகமது ஹிஷாம் கருத்து தெரிவித்தார். இதற்கான திருத்தம் ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பப் கள், மதுக்கடைகளுக்குப்பின்  அதிகப் போதையில் இருந்தால், வாகனம் செலுத்துவதைத் தவிர்க்கவும் இ-ஹெயிலிங் சேவைக்கு அழைப்பு விடுக்கவும் சுய ஒழுக்கமுள்ளவராக இருக்க வேண்டும்.

அவர்கள், சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல், போதையில் இருக்கும்போது வாகனம் ஓட்டினால், தண்டிக்கப்பட நேரிடும்.

அதே சமயம், மதுபானங்களை வழங்கும் பப்கள், மது நிறுவனங்களின் உரிமையாளர்களும் தங்கள் வாடிக்கையாளர்கள் மது அருந்துவதைக் கண்காணிப்பதிலும் பங்கு வகிக்க வேண்டும்.

அவர்கள் வரம்பு மீறாமல் மது அருந்துதல் குறித்த அறிவிப்புகளையும், போக்குவரத்து சேவைகளையும் வழங்க வேண்டும்.

மதுச்சாரமமான அல்காஹால் போதையில்  வாகனம் ஓட்டுவதை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்கள்  உள்ளன. அவர்கள்  குடிபோதையில் இருந்தால், அவர்கள் இ-ஹெயிலிங் சேவைக்குச் செல்ல வேண்டும் அல்லது அழைத்துச் செல்ல அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

பப் உரிமையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குநர்களுடன் இணைந்து பணியாற்றலாம்.

ஸ்ரீ ஹர்த்தமாஸில் அமைந்துள்ள பப் ஒன்று வாடிக்கையாளர்களின்  நலன், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது.

பப் ஊழியர்கள் எந்தவொரு பிரச்சினைகளுக்கும் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பார்கள், எந்தவொரு சூழ்நிலையையும் கையாளத் தயாராக இருக்கிறார்கள் என்று அதன் தலைமை இயக்க அதிகாரி பிரையன் சூ கூறினார்.

தங்கள்  வாடிக்கையாளர்களின் வசிப்பிடம் அருகில் இருந்தால், அவர்களை வீட்டிற்கு அனுப்ப போக்குவரத்தும் வழங்கப்படுவதாக கூறுகிறார்.

எங்களுக்கு  பூஸ் க்ரூசர்ஸ்  என்று ஒரு சேவை உள்ளது என்று அவர் கூறினார்.

ரிச்ஃபீல்ட் கார்னர் என்ற பப்  மதுப்பிரியர்களுக்கு இ-ஹெயிலிங் சேவையை வழங்குகிறது.இது,

நாங்கள் அவர்களின் கார்களை எங்கள் இடத்திற்கு அருகில் நிறுத்த ஏற்பாடு செய்கிறோம். அவர்கள் தங்கள் கார்களைச்  சேகரிக்க மறுநாள் திரும்பலாம் .

எவ்வாறாயினும், இ-ஹெயிலிங் சேவையைப் பயன்படுத்த மறுக்கும் ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முதிர்ச்சியடைந்தவர்கள் , பொறுப்புள்ளவர்கள் என்றும் பப் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

பப்  வாடிக்கையாளர்கள் இப்போது விழிப்புடன் இருக்கிறார்கள், அவர்கள் எவ்வளவு மது அருந்துகிறார்கள் என்பதில் அதிக பொறுப்பு டன் செயல்படுவதாக அறிய முடிகிறது.

அதிகமாக செலவிடும்படி கேட்பதில்லை. அவர்களைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்வதே முக்கியம் என்று கருதுவதால் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வதாகவும் பப் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

கமெண்ட்   1)  மது அருந்தும் வாடிக்கையாளர்களிடமிருந்து வீட்டின் தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக்கொள்வதால் வாடிக்கையாளர்கள் நிதானம் இழக்கும்போது பயன்படும். வீட்டு தொடர்பு எண் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.

கமெண்ட் 2)  போதைக்குப்பின் இ- ஹெயிலிங் சேவைக்கு மாறுமுன் வாடிக்கையாளர்களின் பொருட்கள், பணம் அகியவற்றின் பாதுகாப்புக்கும் உதவியாக இருக்க வேண்டும்.

 கமெண்ட் 3) சுதாரப்பாதிப்பு என்றுவரும்போது மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதுடன் பப் உரிமையாளருக்கும் தெரிவிக்க வெண்டும்.

கமெண்ட் 4) சொந்த வாகனத்தில் வந்திருந்தால் வாகனம் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கவும் வேண்டும். வாடிக்கயாளருக்கான   சேவைக்கு  மாதக்கட்டமும் பெறலாம். அது பப் உரிமையாளரைப் பொறுத்ததாகும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here